சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்

 


சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்


நம்மைக் கண்காணிப்பது நமது காரியங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மலக்குகளை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு, நமக்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த மலக்குகள் அனைத்துத் தருணங்களிலும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நமது செயல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களுக்குரிய ஏடுகளும் அவற்றை எழுதிய மலக்குகளும் மறுமை நாளில் நமது காரியங்களுக்கு முக்கியமான சாட்சிகளாக இருப்பார்கள். இந்த விளக்கத்தை பின்வரும் வரிகளின் வாயிலாக விளங்கலாம்.


وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏  كِرَامًا كَاتِبِيْنَۙ‏ يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏


உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.


(அல்குர்ஆன்: 82:10,11,12)


 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا‌ ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ‏


மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர்.


(அல்குர்ஆன்: 10:21)


 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏


 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏- مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏


மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. 


(அல்குர்ஆன்: 50:16-18)


اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏


அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.       


(அல்குர்ஆன்: 43:80)


 اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏


 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ


வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. 


(அல்குர்ஆன்: 50:17,18)


மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் முன்னிலையில் இந்த என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் வெளியே கொண்டு வருவான். தொன்னூற்று ஒன்பது ஏடுகள் அவனுக்கு விரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தூரம் அளவிற்கு இருக்கும்.


அந்த மனிதனிடம் அல்லாஹ், “இதில் இருக்கும் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா? (உன்னை கண்காணிப்பதற்கு நான் நியமித்த) எனது எழுத்தாளர்கள் உனக்கு (ஏதேனும் இதிலே தவறாக பதிவு செய்து) தீங்கிழைத்து இருக்கிறார்களா?” என்று கேட்பான். “இல்லை, எனது இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான்.


மேலும் இறைவன், “உன்னிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா?” என்று அந்த மனிதனிடம் கேட்பான். “இல்லை, என் இறைவா” என்று அந்த மனிதன் கூறுவான். உடனே இறைவன், “அவ்வாறில்லை, நம்மிடம் உமக்கு சிறந்த நன்மை இருக்கிறது; இன்று உனக்கு அநீதி இழைக்கப்படாது” என்று கூறுவான். (அந்த மனிதனுக்குரிய ஏடுகள்) அவற்றில் இருந்து ஒரு துண்டு சீட்டு வெளியே எடுக்கப்படும்.


அதில், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று இருக்கும். “உன்னுடைய எடையை நிறுத்து” என்று இறைவன் கூறுவான். “இறைவா! இந்த ஏடுகளுடன் இருக்கும் இந்தச் சீட்டு என்ன?” என்று அந்த மனிதன் அவனிடம் கேட்பான். அதற்கு, “நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்” என்று இறைவன் கூறுவான்.


(நன்மை தீமைகளை அளவிடும் தராசின்) ஒரு தட்டில் ஏடுகளும் மற்றொரு தட்டில் அந்தத் துண்டுச்சீட்டும் வைக்கப்படும். ஏடுகள் எடையில் தாழ்ந்துவிடும். துண்டுச் சீட்டு எடையில் கனத்துவிடும். அல்லாஹ்வுடைய பெயரைவிட எந்தவொன்றும் கனத்துவிடாது.


இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்கள்: திர்மிதீ-2639 (2563), இப்னுமாஜா 4290, அஹ்மத் 6699


Comments

Popular posts from this blog

தவறான புரிதல்கள்

நல்ல நண்பன் – கெட்ட நண்பன்

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!