இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை! வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான். 2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ “நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!’’ என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! (அல்குர்ஆன்:2:63.) இப்படி உறுதிமொழி எடுத்த பின்பும் அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்தனர். அந்த வேதத்தை விட்டு விலகினர். அந்த வேதமும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த சமுதாயம் வேதத்தின் படி நடப்பதற்கு இதுபோன்று தூர் மலையெல்லாம் தலைக்கு மேல் தூக்கி வைக்கவில்லை. புனித மிக்க குர்ஆன் இறங்கிய மாதமான ரமளான் மாதத்தில் நோன்பைக் கடமையாக்கி, அந்த ந...